நாம் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டோம் - எதிரணியின் எச்சரிக்கை
நிதி அமைப்பை மறுகட்டமைக்க முடியாது போயுள்ளோம். வரலாற்றில் முதன்முறையாக நாம் வக்குரோத்து நிலையை அடைந்து விட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு ஏற்ற விதமாக குரல் கொடுக்காவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி 2019 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பிரதான எதிர்க்கட்சியாக தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 5% க்கும் குறைவானதாகவும், அந்நிய கையிருப்பு இலக்கு $ 7.8 பில்லியனாகவும் 2020 நடுப்பகுதி வரை இருந்தது. 2020 நடுப்பகுதியில் இருந்து வாழ்க்கைச் செலவுக் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட சகலதும் மறுபக்கம் பயணிக்க தொடங்கியது.
கொரோனா காரணம் என சிலர் கூறலாம், ஆனால் இன்று அதையும் தாண்டிய ஒரு சிக்கல் இருப்பதை நாம் அறிவோம். நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் நாம் ஏற்பட போகும் அவதனாங்களை அரசாங்கத்திற்கு சுட்டிக் காட்டியும் அரசாங்கம் இதை கருத்திற் கொள்ளவில்லை.
இன்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களாக எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் நான் உட்பட மூவரும் பொருளாதார துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டு அனுபவத்துடன் பல்வேறு நிறுவனங்களில் பொருளாதாரப் பின்புலத்துடன் பணியாற்றியுள்ளோம்.
அதே போல அரசியலிலும் பல வருட நேரடி பொருளாதார அனுபவ பின்புலங்களையும், அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக நேரடியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். இன்று நாம் எதிர்க்கட்சியின் வகிகாகத்தில் அல்லாது, மாற்று சக்தியாக மாற்று அரசாங்கத்தின் பாத்திரத்தில் நாட்டிற்கு பொருளாதார விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கிறோம்.
நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும்.1948 இல் சுதந்திரம் பெற்று எழுபத்தி நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த வருடங்களில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு முகம் கொடுக்க முடியுமான சவால்களை கடந்து வந்திருக்கிறோம்.
நாம் ஒரு நாடு என்ற வகையில் பல்வேறு பொருளாதார தாக்குதல்களை எதிர்கொண்டோம் ஆனால் அவற்றையெல்லாம் தாங்கக்கூடிய நாடு எமக்கு இருந்தது. ஆட்சி வரும் அரசாங்கம் மேற்கொண்டதை அடுத்த அரசாங்கம். தடுக்கும்.எனவே ஒரு நாடாக நாம் பொருளாதார நிதி முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்கத் தவறியுள்ளோம்.
நிதி அமைப்பை மறுகட்டமைக்க முடியாது போயுள்ளோம். வரலாற்றில் முதன்முறையாக நாம் வக்குரோத்து அடைந்து விட்டோம். நாம் வக்குரோத்து அடைந்து விட்டோமா என்று சிலர் கேட்கிறார்கள். தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு ஏற்ற விதமாக குரல் கொடுக்காவிட்டால் பிரச்சினையாகிவிடும்.
நாட்டில் ஒரு தீவிரமான டொலர் பணப்புழக்கம் உள்ளது. மற்றும் இன்று முழு நாடும் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தெளிவான பின்னணி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இந்த அரசாங்கம் சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவழிக்கிறது. உற்பத்தி செய்வதை விட அதிகமாகப் பயன்படுத்துகிறது.
இந்த பிரச்சினையின் ஆரம்பம் டிசம்பர் 2019ஆம் ஆண்டில் அந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று இல்லை, அது தொடங்க முன்னரே சர்வதேச வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளோம். அதுவரை தரப்படுத்தல் முகவர்கள் நாட்டின் தரப்படுத்தலிலிருந்து குறைக்கவில்லை. ஆனால் அரசாங்கம் எமது இறையாண்மைப் பத்திரங்களை தள்ளுபடி செய்யும் போது அது தொடர்பில் எதுவுமே செய்வதில்லை.
ஆனால் 2020இற் பிற்பாடு இலங்கையை தரம் தாழ்த்துகின்றன. அங்கிருந்து உலகம் முழுவதுமே நெருக்கடியை உணர்ந்ததுள்ளது. அந்த முடிவை எடுப்பதற்கு முன் ரேட்டிங் ஏஜென்சிகள் ஆய்வு நடத்துவார்கள். மத்திய வங்கியுடன் பேசுவார்கள். இந்த அரசாங்கம் வேண்டுமென்றே இதை செய்யவில்லை.
மாற்றாக தரப்படுத்தல் முகவர் அமைப்புகளை மட்டும் விமர்சித்து வருகின்றனர். பிட்ச் ரேட்டிங் நிறுவனம், ஒரு எஸ்.எம்.எப் ரேட்டிங் நிறுவனம் என்ற இந்த இரண்டு ரேட்டிங் ஏஜென்சிகளையும் முதன்முதலில் இந்த நாட்டுக்குக் கொண்டு வந்தன.
ஒரு நாட்டின் நிதி மதிப்பீடு நிறுவனம் நம்மைத் தரமிழக்கச் செய்யும் போது, அதன் விளைவுகள் மட்டும் அல்ல. நாடு ஆனால் நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களின் தரவரிசைகளுக்கும் மக்கள் வங்கி இன்று இரண்டு அரச வங்கிகளின் ரேட்டிங்கும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் மதிப்பீடுகள் குறையும்போது என்ன நடக்கும்? அதனால்தான் இறக்குமதி செய்ய LCஐ (Letter of credit) திறக்கச் செல்லும் போது இன்று நம்பிக்கை இல்லாமல் போகிறது. இப்போது இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானதாகிவிட்டதால் அதற்கான சரியான தீர்வு காணப்படவில்லை.
2019 டிசம்பரில் இருந்து சரி செய்யப்படாத முதல் பிரச்சினை இந்த எண்ணெய் பிரச்சிணையாகும். இன்று சர்வதேச சந்தைக்கு சென்று சந்தையில் இருந்து டொலர்களை கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. இந் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இது ஆபத்தானது.
இரண்டாவது காரணம், உண்மையில் உரத்தை இறக்குமதி செய்ய அரசிடம் பணம் இல்லை. எதிர்காலத்தில் எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று தெரியவில்லை. மூன்றாவது காரணம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தராமல் காலாவதியான தீர்வாக மத்திய வங்கியின் ஆளுநர் பணத்தை அச்சடித்துள்ளார்.
நான்காவது காரணம் சர்வதேச சந்தையின் மீதான நம்பிக்கையின்மை. இன்று உலகில் நமக்கு ஒரு பெரிய பிரச்சினை எழுந்த வன்னமுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
