குடும்ப சாப்பாட்டு மேசையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் சீரழிகிறது நாடு - தேரர் கொந்தளிப்பு
srilanka
Athuruliye Rathana Thera
dinner table
By Sumithiran
ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் அரச தலைவர் தவறிவிட்டதாகவும், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
'முழு நாடும் சரியான பாதையில் பயணிக்கிறது' என்ற தொனிப்பொருளில் 11 கட்சிகள் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை விட அரசியல் நெருக்கடி வலுவானது என்றும் அவர் கூறினார்.
குடும்ப இரவு உணவு மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதன் விளைவுகளை முழு நாடுமே அனுபவிப்பதாகவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி