பண்டிகைகாலத்தில் முடக்கப்படுமா நாடு? சுகாதார அமைச்சர் வௌியிட்ட தகவல்
srilanka
festive season
travel restriction
By Sumithiran
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில் வெளிநாட்டுப் பிரஜையைத் தவிர ஏனைய இலங்கையர்கள் குணமடைந்துள்ளனர்.
ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை சென்ற இடங்கள் தொடர்பான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டை மீண்டும் முடக்கிவிட வேண்டிய தேவை இல்லை”
எவ்வாறெனினும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சுகாதார கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டுமென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி