வவுனியாவில் போதைப்பொருளுடன் கைதான காதல் ஜோடி
போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல் ஜோடியானது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டதாகவும் சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொலைபேசியினுள் ஐஸ் போதைப் பொருள்
காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இடப்பட்டது.
இதன்போது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் குறித்த காதல் ஜோடி இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையானது வவுனியா உதவி காவல்துறை அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர். நிரோசன் தலைமையில் இ. மதன்ராஜ், செ. வன்னிநாயக, சேனாதீர, மதுசங்க, ரஞ்சுலா சுபத்திரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |