மன்னாரில் போதைப்பொருள் வைத்திருந்த ஆசிரியர் கைது
Sri Lanka Police
Mannar
Sri Lankan Peoples
By Dhilak
மன்னார் - முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விவசாயம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 250 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறை விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |