முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் இடித்தழிப்பு : நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கடும் கண்டனம்!

Sri Lankan Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day Government Of Sri Lanka
By Erimalai Sep 17, 2026 11:28 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளமைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

காவல்துறையினரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அண்மையில் குறித்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் முற்றத்தின் நினைவுக்கல் இடித்தழிக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இராணுவ வெற்றிச் சின்னம்

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக் காட்டுவதற்காக முல்லைத்தீவு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி கல் கடந்த 2026.09.14 அன்று முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள் ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் இடித்தழிப்பு : நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கடும் கண்டனம்! | Demolition Of The Mullivaikkal Memorial Stone

வகை தொகையின்றி தமிழினம் கொத்துக் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இவ் வழிகாட்டல் கல்லின் இடித்தழிப்பு அமைந்துள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும், கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும்.

இடித்தழிக்கப்பட்ட இவ் வழிகாட்டல் கல்லுக்கு அப்பால் சில 100 மீற்றர் தூரம் தள்ளி முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே வீதியில் புக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.

யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

தமிழர் விரோத செயற்பாடுகள்

இந்தநிலையில் இவ்வழிகாட்டி கல், அனுமதியற்ற கட்டடம் என முல்லைத்தீவு காவல்துறையினரால் கடந்த 2026.06.11 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட B/692/2026 இலக்க வழக்கின் மீதான கட்டளையாகவே இவ்வழிகாட்டி அமைப்பை அகற்றுமாறு பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் இடித்தழிப்பு : நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கடும் கண்டனம்! | Demolition Of The Mullivaikkal Memorial Stone

ஏற்கனவே முல்லைத்தீவு காவல்துறையினரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவ்வழிகாட்டி கல் மேல் அமைக்கப்பட்டிருந்த "காயமடைந்த பாடசாலைச் சிறுவன் ஒருவன் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு செல்லும் பாதையை சுட்டிக்காட்டுவது போல்" அமைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றுவதற்காக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றினால் அச்சிலையை அகற்றுவதற்கான கட்டளை வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் இரவோடிரவாக இனந்தெரியாதோரால் அச்சிலை அகற்றப்பட்டது.

தற்போதைய நிலையில் சிறிலங்கா காவல்துறையினரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் சிறிலங்காவில் எந்த அரசுகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருகின்றன.

ஆகவே சிறிலங்கா அரசினுடைய இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும் வலியுறித்தி நிற்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான விதிகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான விதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021