சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த நடிகர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Arrest
By Pavi
சிங்கள திரைப்பட நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16.09.2026) இரவு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (17) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விஷ்வ கொடிகார
இதன்போது, விஷ்வ கொடிகாரவிடம் இருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கொக்கெய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை விஷ்வ கொடிகார ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |