கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது
சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து 17 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தின் ஊழியர்கள் வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னணி
அங்கு சந்தேகநபரின் உள்ளாடையில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 66 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தங்கத்தின் எடை 07 கிலோ 700 கிராம் எனவும் இதன் பெறுமதி பதினேழு கோடியே அறுபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் குறிப்பிட்ட ஒருவரினால் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening