தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு தடை: வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்
புதிய இணைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்றைய தினம்(29) யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்படடுள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றத்தினால் எடுத்துகொள்ளப்பட்ட வழக்கு ஏப்ரல் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு வழக்கானது இன்று(29) திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு தாக்கலானது தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்களான திருகோணமலை மாவட்ட உறுப்பினர் சந்திரசேகரம் பரா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பீட்டர் இளஞ்செழியனால் வழக்கு தொடரப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |