விடுதியுடன் கூடிய மதுபான சாலைக்கு 14 நாட்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
Kilinochchi
By Vanan
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில் விடுதியுடன் கூடிய மதுபான சாலைக்கு 14 நாட்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முழங்காவில் விநாயகர் ஆலயம், பாடசாலை ஆசிரியர் விடுதி, பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
பொதுத் தொல்லை

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுத் தொல்லை ஏற்படுத்துவதாக தெரிவித்து காவல்துறையினரால் வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இன்றைய தினம்(06) குறித்த வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமைப்புகள் மற்றும் முறைப்பாளர்கள் சார்பில் அதிபர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணி எஸ். விஜயராணி உள்ளிடடோர்
முன்னிலையாகி இருந்தனர்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்