தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம்

Sri Lanka Police Sri Lankan Tamils Trincomalee SL Protest Buddhism
By Sathangani Oct 01, 2023 07:05 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பெளத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (01) முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம்  நிறுத்தப்பட்டது.

திருகோணமலை - நிலாவெளி காவல்துறையினால் பெறப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவின்  பேரில் குறித்த ஆர்ப்பாட்டமானது தடுத்து நிறுத்தப்பட்டது.

இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு மக்களால் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழர் பகுதியில் உத்தரவை மீறி கட்டப்படும் மற்றொரு விகாரை: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

தமிழர் பகுதியில் உத்தரவை மீறி கட்டப்படும் மற்றொரு விகாரை: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்


நீதிமன்ற தடை

இருப்பினும் கடந்த திங்கட்கிழமை (25) முதல் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம் | Court Bans Protest To Be Carried Out In Trinco

இதேவேளை குறித்த பகுதியில் இடம்பெறும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடைசெய்யக் கோரியும் திருகோணமலை மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னடுக்க ஆயத்தமாகிய நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த காவல்துறையினரால் 8 நபர்களது பெயர் குறிப்பிடப்பட்ட வகையிலான நீதிமன்ற தடை பெறப்பட்டுள்ளதாகவும் அங்கு ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கு செய்தியாளர்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்ட போது காவல்துறை  உயர் அதிகாரி ஒருவரால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்காக அங்கு வருகை தந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம் | Court Bans Protest To Be Carried Out In Trinco

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் : சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் : சுரேஷ் க.பிரேமச்சந்திரன்


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024