இரத்துச் செய்யப்படுமா அதானியின் மன்னார் காற்றாலை ஒப்பந்தம்: நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு
மன்னார்(mannar) விடத்தல்தீவு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக இந்திய நிறுவனமான அதானியுடன்(adani) செய்து கொண்ட ஒப்பந்தத்தை செல்லாததாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 23 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
இந்த மனுவை இலங்கை(sri lanka) பசுமை அமைப்பின் தலைவர் சங்க சந்திம அபயவர்தன சமர்ப்பித்தார். இந்த மனுவை இன்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யு.பி. கரலியத்த விசாரித்தார்.
திட்டம் தொடர்பாக இறுதி முடிவு
இந்தத் திட்டம் தொடர்பான பல முக்கியமான வழக்குகள் அடுத்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மனுவை மே 23 ஆம் திகதி பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |