அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை(ramanathan archchuna) கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அநுராதபுரம்(anuradhapura) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அநுராதபுரம் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணை
அநுராதபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக அநுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |