அர்ச்சுனா எம் . பி மீது பாயப்போகும் சட்டம் : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
அநுராதபுரத்தின் (Anuradhapura) ரம்பேவ பகுதியில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (Ramanathan archchuna) மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்புடும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இன்றைய(21) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக சென்றவேளை, அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளி
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த மோதலின் காணொளியில், நாடாளுமன்ற உறுப்பினர், போக்குவரத்து காவல்துறையினருடன் ஒத்துழைக்க மறுப்பதைக் காட்டுகிறது.
சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்ட சில கருத்துக்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்அவை சமூகங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்தவையா என மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
காணொளியில், நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரை வாய்மொழியாக எதிர்கொண்டு அவர்களின் செயல்களைக் கேள்வி கேட்பதைக் காணலாம்.
"நாங்கள் VIP-கள் இல்லையா" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டார், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்த சலுகைகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் விடயங்கள்
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |