அஞ்சி நடுங்கும் ராஜபக்ச குடும்பம்...! கைதாகும் தருவாயில் ஷிராந்தி - நாமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இன்று (09-02-2026) காலை 9:30 மணிக்கு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய நாட்களாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த விசுவாசிகள் மற்றும் அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த விசாரணைகள் நாமல் மற்றும் ஷிராந்தியின் கைதில் முடியுமா என்ற அச்சம் அவர்கள் தரப்பில் மேலோங்கியுள்ளது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த நிதி மோசடி மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான கோப்புகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளமை ராஜபக்சாக்களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு, ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் அடுத்தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு பாரிய சவாலாகவே பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பிலும், கைதுகளின் அடுத்த கட்டம் தொடர்பிலும், தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் மற்றும் நடப்பு அரசியல் தொடர்பிலும் வரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 5 மணி நேரம் முன்