அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
புதிய இணைப்பு
சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்துள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி ஒரு பிரேரணையை முன்வைத்திருந்ததோடு, தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அனுராதபுரம் காவல்துறை சந்தேக நபரை "அர்ஜுன லோச்சன்" என்று பெயரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, சரியான சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கல்வல பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.
வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக காவல்துறையினர் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நகர்த்தல் பத்திரம்
இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து குறித்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பிற்பகல் 1.30க்கு வழக்கை விசாரிக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடந்த கருத்து மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குறித்த சம்பவம் அனுராதபுரத்தின் (Anuradhapura) ரம்பேவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்றைய (21.01.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது சொந்த வாகனத்தில் கொழும்பு (Colombo) நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
இதன்போது, விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டியதற்காக நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரினர்.
"நான் நாடாளுமன்றத்திற்குப் போகிறேன்." என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த பின்னரும் காவல்துறை அதிகாரிகள் அவருடைய ஆவணங்களை தொடர்ச்சியாக கோரியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்