யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினையில் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 20பேர் வரை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகள் - பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்