கனவாகிப்போன தயாசிறியின் பொதுச்செயலாளர் ஆசை
தம்மை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக அங்கீகரிக்கக் கோரியும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியையும், நிமல் சிறிபால டி சில்வா தலைவர் பதவியையும் வகிப்பதைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்திருந்த மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தமக்கு உரிமையுள்ள நிவாரணங்களை வழங்கக் கோரியும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கு மாகாண உரிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இவ்வழக்கு, இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி மறுப்பு
நிமல் சிறிபால டி சில்வா தலைவர் பதவியையும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியையும் வகிப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதற்கிடையில், இதன் பூர்வாங்க விசாரணை 2027 ஜனவரி 8 அன்று நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |