நாமல் மீதான பணச்சலவை வழக்கு மீதான விசாரணை பெப்ரவரியில்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் மேலும் சிலர் மீதான பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரை இன்னும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என காவல் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுரையின் நிலையை அறிந்துகொள்வதற்காக இவ் வழக்கை 2027, பெப்ரவரி 11ஆம் திகதியன்று மீண்டும் அழைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க உத்தரவிட்டுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
15 மில்லியன்
நாமல் ராஜபக்ச என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் சுமார் ரூ. 15 மில்லியன் முதலீடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்குரிய பரிவர்த்தனை தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு முறைப்பாட்டை தாக்கல் செய்து, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |