இலங்கையின் இன்றைய கொவிட் நிலவரம்
இலங்கையில் மேலும் 23 கொவிட் மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15, 595 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 12 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாக இன்று வெளிவந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 1,331 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 435 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581,205 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
