கொரோனா தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள மகிழ்ச்சிமிக்க செய்தி!(வீடியோ)
உலகில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், தொற்றுநோயின் கடுமையான தாக்கம், இந்த ஆண்டு நடுப்பகுதியுடன் முடிவடையும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
This year we could end the acute phase of the #COVID19 pandemic if we vaccinate 70% of the population of every country, with a focus on the most at-risk groups, and use all strategies and tools in a comprehensive and equitable way. pic.twitter.com/XX8Sb2faMU
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) January 30, 2022
இந்த ஆண்டின் ஜூன், ஜூலையில், உலகளாவிய ரீதியில் 70 சதவீத தடுப்பூசி இலக்கு அடையப்படும் என்று அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
இதனையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அதற்கான அடைவு மக்களின் கைகளிலேயே உள்ளது என்று அதானோம் குறிப்பிட்டார்.
மொடர்னாவின் தடுப்பூசியின் வரிசைமுறையைப் பயன்படுத்தி ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி தொடர்பில் கருத்துரைத்த அவர், குறைவான சேமிப்பக கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த விலையில் இதனை பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
2024 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் உரியமுறைகளை கடைப்பிடித்தால், இந்த ஆண்டுக்குள் நோயின் கடும் தாக்கத்தை குறைக்கமுடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் வைத்திய நிபுணர் மைக் ராய்ன் தெரிவித்துள்ளார்.
"The acute phase of the pandemic, the pandemic that's been associated with the tragedy of deaths & hospitalizations - that can end in 2022."-@DrMikeRyan on tactics and strategies to counter #COVID19. pic.twitter.com/Lq9Iul9Tye
— World Health Organization (WHO) (@WHO) December 31, 2021
