மீண்டும் தலை தூக்கிய கொரோனா வைரஸ் : எழுந்துள்ள அச்சம்
சிங்கப்பூர் (Singapore) மற்றும் ஹாங்காங்கில் (Hong Kong) மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்தோடு, சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை
மே மூன்றாம் திகதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல தாய்லாந்திலும் (Thailand) கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ்
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனால், பல லட்சம் மக்கள் உயிரிழந்ததுடன் இதற்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் உலகம் பழைய நிலைக்கு திரும்பியது.
இந்தநிலையில், தற்போது மீண்டும் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை உலக மக்களிடையே பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
