யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் மகள் படைத்த சாதனை
யாழில் (Jaffna) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் மகள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அராலி வள்ளியம்மை யா/ஞாபகார்த்த வித்தியாசாலையில் கல்வி பயிலும் ஜெயரஞ்சன் அஸ்வினி என்ற மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் 140 புள்ளிகளை பெற்று அவர் சாதித்துள்ளார்.
கொரோனா தொற்று
தியாகராஜா ஜெயரஞ்சன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். பின்னர் குறித்த மாணவி தாயாரின் அரவணைப்பிலேயே இருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
இந்தநிலையில், அவரது குடும்பம் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் குறித்த மாணவி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி அதில் வெற்றி பெற்று பெற்றோருக்கும் மற்றும் பாடசாலை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
