வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகள்: மக்கள் கடும் விசனம்
வவுனியா(Vavuniya) நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நகரை சூழ பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வீதிகளினை பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்வேறு தேவைகளிற்காக இவ்வீதியினை பயன்படுத்தும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டாக்காலி மாடுகள்
அத்துடன், இக்கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்குள்ளாகும் நிலையும் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து கால்நடைகளை பராமரிப்பாளர்கள் கவனம் எடுக்க வேண்டும் அல்லது வவுனியா நகரசபையானது கால்நடைகள் பராமரிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிலளித்த வவுனியா நகரசபை செயலாளர் பாலகிருபன், “தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வருட ஆரம்பத்திலும் நகரில் கட்டாக்காலியாக திரிந்த 70 மாடுகள் பிடிக்கப்பட்டதுடன் அந்த மாடுகளின் உரிமையாளர்களிற்கு தண்டப்பணமும் அறவிடப்பட்டிருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
