தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகிய பட்டாசுக் கடை...!
Sinhala and Tamil New Year
Fire
Accident
By Pakirathan
புது வருடக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், பட்டாசு விற்பனைகளும் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், நேற்றைய தினம் இரவு பட்டாசு கடை ஒன்று தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் கிரியுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சேதங்கள்

கிரியுல்ல காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும், குறித்த தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இருபுறமும் உள்ள இரண்டு கடைகளின் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி