தமிழ் மக்களுக்கு இந்திய ஆதரவுத் தளம்? வெளிப்பட்ட நோக்கு
இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிடச் செய்யும் ஒரு தளத்தை தயாரிப்பது தான் தமது (இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய 6 தமிழ் தேசியக் கட்சிகள் ) நோக்கம் என கடந்த நாட்களில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
உண்மையில் அதுவே சரியான கூற்றாகும் என சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சனுடன் பங்கேற்று கருத்துவெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாகவே பேசுபொருளாக மாறியிருக்கின்ற 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்துள்ள நிலையில், இது சார்ந்த கலந்துரையாடலாக வருகிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,
பகுதி - 1
பகுதி - 2
