தொடர்ந்து வேட்டையாடப்படும் தமிழர்களின் உரிமைகள்! நாடாளுமன்றத்தில் முழக்கம்
தமிழ்மக்களின் குடிப்பரம்பலை அடியோடு அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளை முன்னெடுப்பதை சிங்கள இனவாத அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அதிகாரக் கரங்களினால் வலிந்து பறித்தெடுத்து, அந்நிலங்களில் பௌத்த விகாரைகள் அமைத்தல், இராணுவ முகாம்களை கட்டமைத்தல், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குதல், சீனா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக அவற்றை வழங்குதல் என்பவற்றின் ஊடாக தமிழ்மக்களின் குடிப்பரம்பலை அழிப்பதற்கான முயற்சிகளை சிங்கள அரசு முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அண்மைக் காலங்களில் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 37 இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கை ஒன்றை சபாபீடத்துக்கு சமர்ப்பித்து, அதுதொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே சிறீதரன் எம்.பி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விவரண அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.















