இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் - சிறிலங்கா சுதந்திர கட்சி
அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஒரு வாரத்திற்குள் உருவாக்குமாறு சிறிலங்கா சுதந்திர கட்சி அரச தலைவரிடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளும் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது இந்த யோசனையை முன்வைத்ததாக சிறிலங்கா சுதந்திர கட்சி பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பானது நேற்று பிற்பகல் 4.30 தொடக்கம் இரவு 8.30 வரையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரும் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இச் சந்திப்பின் போது, தற்போதய பொருளாதார நெருக்கடி நிலை அதற்கான தீர்வுகள் குறித்தும் நேற்று முன்தினம் மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
