சச்சினை அடுத்து மற்றொரு வீரருக்கும் தொற்றியது கொரோனா
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சச்சினை அடுத்து மற்றொரு வீரரான யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கு தொற்றுள்ளதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த சாலை விழிப்புணர்வு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணிக்கு டெண்டுல்கர் கப்டனாக பங்கேற்றார்.
இதில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்றன. இதனால் அந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ராய் பூரில் நடந்த இந்த போட்டியில் ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டனர்.