பற்றியெரிந்த கிரிமியா பாலம் - ரஷ்யா வெளியிட்டஅறிவிப்பு (காணொளி)
பற்றியெரிந்த கிரிமியா பாலம்
உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு செல்லும் கிரிமியா பாலத்தில் இன்று ஏற்பட்ட பாரிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் பிரதேசமான கிரிமியாவை ரஷ்யா தனது பகுதியுடன் இணைத்துக்கொண்டது. தற்போது உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை தொடக்கிய ரஷ்யா இந்த நீண்ட பாலத்தினூடாவே போக்குவரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் குறித்த பாலத்தில் இன்றையதினம் சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வெடித்து சிதறியதாகவும் இதனால் பாரிய தீ ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
??✅ pic.twitter.com/yXbGuaMeh0
— MFA Russia ?? (@mfa_russia) October 8, 2022
மீண்டும் ஆரம்பமான போக்குவரத்து
இதனிடையே இந்த பாரவூர்தி வெடித்து சிதறியவேளை அருகிலுள்ள காரில் இருந்த மூவர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பாலம் வழமைபோல் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் இலகுரக வாகனங்களுக்கான போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இன்று மாலை ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட காணொளியில் பாலத்தில் கார்கள் பயணம் செய்வது காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்திற்கு உக்ரைன் நேரடியாக பொறுப்பேற்கவில்லை.ஆனால் உக்ரைன் அதிபரின் ஆலோசகர், இந்த தீ விபத்து ஒரு தொடக்கம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்யாவிலிருந்து கிரிமியாவிற்கு செல்லும் பாலத்திற்கும், தீபகற்பத்திற்கும் மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் உள்கட்டமைப்பிற்கும் கடுமையான பாதுகாப்பை வழங்குமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
பாலத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை அடுத்து ஆணையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு FSB பாதுகாப்பு சேவை பொறுப்பாகும் என்று புடின் (Vladimir Putin)தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி -கிரைமியா - ரஷ்யாவை இணைக்கும் பாலத்தில் வெடிப்புச் சம்பவம்
