கிரைமியா - ரஷ்யாவை இணைக்கும் பாலத்தில் வெடிப்புச் சம்பவம்
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட கிரைமியா பகுதியையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
உக்ரைன் கிரைமியா பகுதி ரஷ்யாவினால் 2014 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட குறித்த பாலத்தை ரஷ்ய அதிபர் புடின் 2018 ஆம் அண்டு திறந்து வைத்தார்.
குறித்த பாலத்தின் ஊடாக இராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் இன்று காலை குறித்த பாலத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
உக்ரைனின் நிலைப்பாடு
The Crimea bridge was destroyed in a Suicide bombing. It will be the first suicide bombing that the mainstream media will celebrate. pic.twitter.com/cbjGIQ2bmw
— Syrian Girl ??? (@Partisangirl) October 8, 2022
குறித்த பாலத்தில் பயணித்த தொடருந்து ஒன்று தீப்பற்றி எரிவதுடன் அருகிலுள்ள மற்றுமொரு பாலம் சேதமடைந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் பாலத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை ஆரம்பம் எனக் கூறியுள்ளார்.
சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் எனவும் திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்கு திரும்ப கிடைக்கப் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார். எனினும் குறித்த வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் நேரடியாக பொறுப்புக் கூறவில்லை.
ரஷ்யாவின் நிலைப்பாடு
இந்த நிலையில் கிரைமியா பாலத்தில் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவை நியமிக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பாலத்தில் பயணித்த பாரவூர்தியில் ஏற்பட்ட ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து தொடருந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
