ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு - நிறைவேறியது விசேட சட்டமூலம்
ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலமானது நேற்று (22) நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான அதேநேரம், எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.
நிவாரண கொடுப்பனவு
அதன்படி, ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் 181 வாக்குகள் பெரும்பான்மையுடன் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தனியார் ஊழியர்களின் சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ (A. Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக இருந்த 17,500 ரூபாவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
