வடக்கில் குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி: உறுதியளித்த புதிய காவல்துறை மா அதிபர்
வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென புதிதாக பதவியேற்ற வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் சி.ஏ.தனபால உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொ்டர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியே. வடக்கில் ஏற்கனவே பணியாற்றியவன் என்ற அடிப்படையில் இங்குள்ள பிரச்சினைகள் பலவற்றை அனுபவ ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் நான் அறிவேன்.
அமைதியான வாழ்க்கை
ஆகையால், வடக்கு மாகாண மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இருக்கப்போவதில்லை.
வடக்கு மாகாணத்தில் வீதிப் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு மேம்பட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
போதைப்பொருள் பிரச்சினைகள், சமூகத்தில் புரையோடிப் போயுள்ள இதர குற்றச் செயல்கள் விரைவில் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |