கட்டளையை மீறி பயணித்த வானின் சாரதி! வெளியான அதிர்ச்சிகர பின்னணி
காவல்துறையினரின் உத்தரவை மீறி இரத்மலானை பகுதியில் வானை செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அதன் சாரதி பல குற்றங்கள் தொடர்பில் மெதிரிகிரிய காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்தார்.
நேற்று (25.10.2025) இரத்மலானை பகுதியில் காவல்துறையினரின் கட்டளையை மீறி செலுத்தப்பட்ட வான் மற்றும் கைது செய்யப்பட்ட சாரதி தொடர்பில் பல உண்மைகளை தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, குறித்த சாரதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா அல்லது போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கைது
கைது செய்யப்பட்ட நபர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சுற்றுலாப் போக்குவரத்து சாரதியாக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இரத்மலானையில் உள்ள கொலுமடம சந்திக்கு அருகில் கட்டளை மீறிச் சென்ற வேனை கல்கிஸ்ஸை காவல்துறையினர் துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்