இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி- இந்திய நாடாளுமன்றில் எதிரொலிக்கவுள்ள விளக்கம்
Dr. S. Jaishankar
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Sumithiran
இலங்கை நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு விளக்கமளிக்கவுள்ளார்.
இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
விளக்கமளிக்கவுள்ள ஜெய்சங்கர்
இலங்கையின் தற்போதைய நிலைமை, வழங்கப்பட வேண்டிய உதவிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சரினால் விளக்கமளிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் இலங்கைக்கு எந்தவகையான உதவிகளை வழங்க முடியும் என்பது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை இந்த குழு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
