வெளிநாட்டு பெண் பாலியல் துன்புறுத்தல் : பௌத்த பிக்கு கைது
இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் உனவதுன பகுதியில் உள்ளவிகாரையைச் சேர்ந்த பௌத்த துறவி நேற்று (16) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக உனவதுன சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐம்பது வயதான நியூசிலாந்து பெண் உனவதுன சுற்றுலா காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கருதப்படும் துறவி உனவதுன சுற்றுலா காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகளின் உத்தரவை அடுத்து துறவி கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருந்தார்.
காவல்துறை சுற்றுலாப் பிரிவின் பணிப்பாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாத் விதானகமகேவின் உத்தரவின் பேரிலும், உனவதுன சுற்றுலா காவல் பணியகத்தின் சப்-இன்ஸ்பெக்டர் அமிலா பிரியங்கராவின் அறிவுறுத்தலின் பேரிலும்,குறித்த துறவி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
