Anime படைப்பாளர்களுக்கு சம்பள உயர்வு: மஸ்கின் அதிரடி அறிவிப்பு
பெண் அனிமே (Anime) கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் AI அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆண்டுக்கு ரூபாய் 3.7 கோடி வரை பிரமாண்ட சம்பளம் வழங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகச் செய்தி
இந்த கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு அறிவிப்பு, xAI நிறுவனத்தின் வலைத்தளத்தில் Careers என்ற பிரிவில், “Fullstack Engineer - Waifus” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
“Waifu” என்ற சொல் அனிமே ரசிகர்கள் மத்தியில் பெண் கதாபாத்திரங்களை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் ஆகும்.
வணிகச் செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின் படி, இந்த AI அவதாரங்கள் xAI இன் Grok AI chatbot இல் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்ப்பாரக்கப்பட்டுள்ளது.
மஸ்க் உறுதி
இந்தத் திட்டத்தை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தற்போது "மென்மையான அறிமுகம்" (soft launch) கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் சந்தாதாரர்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், xAI நிறுவனம் Grok iOS செயலியில் "Ani" மற்றும் "Rudi" என்ற இரண்டு அனிமே AI கம்பேனியன்களை அறிமுகப்படுத்தியது.
நிறுவனம் மூன்றாவது அனிமே AI கம்பேனியனையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த கம்பேனியன்கள் பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
வேலைவாய்ப்பு
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், மல்டிமீடியா சிஸ்டம்ஸ் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் அனுபவம் உள்ள பொறியாளர்கள் தேவை என்று xAI குறிப்பிட்டுள்ளது.
இந்த AI கம்பேனியன்கள் பயனர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த உதவும் என்றும், பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப AI உடன் உரையாட முடியும் என்றும் xAI நம்புகின்றது.
இருப்பினும், இந்த நடவடிக்கை தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க விவாதப் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

