கேரள செவிலியரின் உயிர்தான் வேண்டும்: கொல்லப்பட்டவர் தரப்பில் எச்சரிக்கை
கேரள செவிலியர் வழக்கில் உயிருக்கு பதிலாக கொலை செய்தவரின் உயிர்தான் வேண்டும் என கொல்லப்பட்டவரின் சகோதரர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (34), 2008 ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் செவியர் வேலைக்கு சேர்ந்தார்.
2017 ஆம் ஆண்டு, ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவரைக் கொலை செய்து விட்டு தப்ப முயன்றதாக நிமிஷா ஏமன் எல்லையில் கைது செய்யப்பட்டார்.
மரண தண்டனை
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது, இந்திய அரசு மற்றும் செல்வாக்கு மிக்க இஸ்லாம் மதத் தலைவர் ஒருவரது முயற்சியால் நிமிஷாவின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தன் சகோதரைக் கொன்ற நிமிஷா கொல்லப்பட வேண்டும் என மஹ்தியின் சகோதரரான அப்தெல் வலியுறுத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஷரியா சட்டப்படி, தவறுதலாக ஒருவரைக் கொன்ற நபரிடம் இரத்தப்பணம் என்னும் பணத்தை வாங்கிவிட்டு அவரை மன்னிக்கலாமாம்.
பழிக்குப் பழி
அது திய்யா (Diyya) என அழைக்கப்படுகின்றது இருப்பினும் திட்டமிட்டு வேண்டுமென்றே ஒருவரைக் கொன்றவருக்கு மன்னிப்பு கிடையாது.
அவருக்கு, பதிலுக்கு பதில்தான் செய்யவேண்டும் அதாவது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அழைக்கப்படுகின்ற நிலையில், அது கிஸாஸ் (Qisas) என அழைக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், நிமிஷா தன் சகோதரரை திட்டமிட்டு, வேண்டுமென்றேதான் கொலை செய்தார் எனவும் ஆகவே, உயிருக்கு பதிலாக உயிர்தான் வேண்டும் என அப்தெல் தெரிவித்துள்ளார்.
பேச்சு வார்த்தை
இன்னொரு பக்கம், மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தும் மதத் தலைவரான முஸ்லியாரை எதிர்க்கும் சிலர், நிலைமையை மோசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சமூக ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளைப் பரப்பிவரும் அவர்கள், இரத்தப்பணம் வாங்குவது மஹ்தி குடும்பத்தின் நற்பெயரைக் கெடுப்பதாக அமையும் என்றும், கொல்லப்பட்ட மஹ்தியின் கௌரவத்துக்கு அது இழுக்கு என்றும் விமர்சனம் முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது மஹ்தி குடும்பத்தினரின் சுயமரியாதையை தூண்டுவதாக அமைந்துள்ளதால், அவர்கள் பழிக்குப் பழிவாங்கவே விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
