104 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த முதலை: சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி
United States of America
Florida
World
By Laksi
அமெரிக்காவில் (United States) 104 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் முதலை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மூதாட்டி அமெரிக்கா- புளோரிடா (Florida) மாகாணத்தில் ஜாக்சன் வில்லி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டிற்குள் புகுந்த முதலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறையினருக்கும் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலையை மீட்டு சென்ற காணொளி
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
'நாங்கள் அவரை கட்டமுடியாது' என்ற தலைப்பில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளை பார்த்த பயனர்கள் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி