இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
இரண்டாம் இணைப்பு
இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் (India) - குஜராத் ( Gujarat) மாநிலத்தில் கேளிக்கை அரங்கொன்றில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
குறி்த்த தீ விபத்து நேற்று (25) மாலை குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கேளிக்கை அரங்கொன்றில் உள்ள விளையாட்டு திடலில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து
குறித்த விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்தக் கேளிக்கை அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை
இதனையடுத்து தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        