பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்
                                    
                    United Kingdom
                
                                                
                    Crime
                
                                                
                    England
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    பிரித்தானியாவில் (United Kingdom) வயதான தம்பதியர் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது டார்லிங்டன் (Darlington) நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரையன் ஸ்வாடில் (86) மற்றும் ஓல்வினின் (84) என்ற முதியவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
தம்பதியரின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தம்பதியர் ஓய்வூதியதாரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில்,குறித்த முதியவர்களை பராமரித்த பணியாளர்களிடம் இருந்து தொடர்புகள் வருகின்றதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
டர்ஹாம் அதிகாரி ஒருவர் தனது அறிக்கையில், தம்பதியர் இறந்ததற்கான சரியான காரணத்தை ஆராய அதிகாரிகள் பணியாற்றுவதால் விசாரணை தொடர்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        