அருங்காட்சியகமாக தலைவர் பிரபாகரனின் வீடு - நடக்கவுள்ள மாற்றங்கள்

Tamils Jaffna Government Of Sri Lanka Tamil diaspora World
By Theepan Feb 24, 2026 09:33 AM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கட்டிடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பின்வரும் விடயங்கள் பற்றி வல்வெட்டித்துறையின் முன்னாள் தவிசாளர்களான நடராஜா அனந்தராஜ் பின்வரும் விடயங்கள் தொடர்பாக தாயகம் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தெளிவூட்டல் ஒன்றை வழங்கி உள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்  13 வயது வரை வாழ்ந்த வீடு, இராணுவத்தினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, அத்திவாரத்துடன் சேர்த்து அதன் இடிபாடுகளும் அங்கிருந்து அகற்றப்பட்டன.


சட்டத்தரணியின் மனைவியை கொன்ற துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டத்தரணியின் மனைவியை கொன்ற துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சிறுவயதில் வாழ்ந்த வீடு

அந்த வீடு இருந்த அவர்களது காணி சீரழிந்த நிலையில் இருப்பதைப் புகைப்படங்கள் மூலம் பார்ததுச் சகித்துக்கொள்ள இயலாத காரணத்தால் அவரது மூத்த சகோதரியான இக்காணியின் உரிமையாளர் ஜெகதீஸ்வரி மதியாபரணம்  தமிழ் மக்களுக்குப் பயனுடையதாக இருக்கக்கூடிய ஒரு தரமான கட்டிடத்தை அமைக்குமாறு தெரிவித்து, அதற்கான சட்ட அங்கீகாரத்தை அற்றோர்ணி தத்துவம் மூலம் நம்பிக்கையின் அடிப்படையில் என்னிடம் ஒப்படைத்துள்ளார்.

அருங்காட்சியகமாக தலைவர் பிரபாகரனின் வீடு - நடக்கவுள்ள மாற்றங்கள் | Prabhakaran S House To Be Turned Into Museum

வே.பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த வீட்டின் காணி உலகெங்கும் வாழும் தமிழர்கள் போற்றி வணங்கும் ஒரு புனித இடமாகும்.

இந்த இடத்தில் காணி உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அமைய அமைக்கப்படும் புதிய கட்டிடம் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இடமாகவும் பயனளிக்கும் வகையிலும் அமைதல் வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்ததால், வல்வெட்டித்துறையிலும், ஏனைய இடங்களிலும், மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் உணர்வாளர்களிடையே பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்து 3 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை அமைப்பதற் கான வரைபடம் தயாரிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய வரலாறு

அதில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டு பொறியியலாளர், கட்டிடக் கலைஞர்கள், கட்டிட வடிவமைப்பாளர் ஆகியோரைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

• கீழ்த்தளத்தில் கலைக்கூடம் அமைத்தல் - இதன்மூலம் உள்ளுர் கலைஞர்களின் ஆற்றுகைகளை பொதுமக்கள் பார்த்துப் பயனடையும் வகையிலும், இளங்கலைஞர்களின் கலைத்துறை ஆற்றலை வளர்க்கும் வகையிலும், கலை, கலாசார மற்றும் ஆன்மீக கருத்தரங்க நிகழ்ச்சிகளை நடத்துதல்.

அருங்காட்சியகமாக தலைவர் பிரபாகரனின் வீடு - நடக்கவுள்ள மாற்றங்கள் | Prabhakaran S House To Be Turned Into Museum

• முதலாம் மாடியில் உயர்தர மாணவர்களும், ஆசிரியர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் தமது ஆராய்ச்சி மற்றும் கல்வித் தேவைகளுக்காக சிறந்த நூல்களையும், டிஜிற்றல் நூலக வசதிகளையும் உள்ளடக்கியதாக ஒரு தரமான நூலகத்தை அமைத்து அதற்கான பயிற்சி பெற்ற நூலகரையும் நியமித்தல்.

• தமிழர்களின் பாரம்பரிய வரலாறுகளை எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில 2ஆம், 3ஆம் மாடிகளில் வரலாற்றுச் சம்பவங்களை உள்ளடக்கிய காட்சிக்கூடம் அமைத்தல்.

• க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பொதுப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக் காலம் நெருங்கும்பொழுது பல்கலைக்கழக விரிவுரையாளர்களினதும்,தரமான பட்டதாரி ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்று இலவச கருத்தரங்குகளை நடத்துதல்.

• தமிழ் சமூகத்தின் வளரும் இளம் தலைமுறையினரிடையே சிறந்த ஆளுமையை வளர்க்கும் வகையில் ஆன்மீகம், கல்வி, கலை, பண்பாடு, வரலாற்றைப் பேணுவதை ஊக்குவித்தல் ஆகிய துறைகளில் ஒரு சமுகக் கட்டுக்கோப்பான தலைமைத்துவக் கட்டமைப்பை உருவாக்குதல்.

இவ்வளவு விடயங்களும் உள்ளடக்கும் வகையில் நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் விதிமுறை களுக்கு அமையவும் கட்டிட வரைபடம் தயாரிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பக் கட்டணமாக 10,125.00 ரூபாவையும் செலுத்தி; 03.12.2025 அன்று நகரசபையில் உரியமுறையில் கையளிக்கப்பட்டது.

ஒலுகலவுக்கு பீதியை ஏற்படுத்த போடப்பட்ட திட்டம்! வசமாக சிக்கிய கொலையாளி

ஒலுகலவுக்கு பீதியை ஏற்படுத்த போடப்பட்ட திட்டம்! வசமாக சிக்கிய கொலையாளி

வீடு புதிதாகக் கட்ட வேண்டும் 

இவ்வாறு கையளிக்கப்பட்ட விண்ணப்பம் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து ஆராய்ந்து அனுமதிக்கப்படாது, 60 நாட்களுக்கு மேலாகக் கிடப்பில் வைத்திருந்து அனுமதி தருவதற்கான எவ்வித நடவடிக்கையும் நகரசபையினால் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் காணி உரிமையாளரான ம.ஜெகதீஸ்வரி நினைவூட்டல் கடிதத்தையும் கவனத்தில் எடுக்காது 30.01.2026 இல், நடைபெற்ற கூட்டத்தில் வழமைக்கு மாறாக எங்களுடைய விண்ணப்பம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இச்சபை அமர்வில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அறிவுபூர்வமானதாகவும், நடைமுறைச் சாத்தியமான தாகவும் அமையவில்லை.

அந்தக் காணியில் வே.பிரபாகரன் வாழ்ந்த வீடு போன்ற ஒரு வீடு புதிதாகக் கட்டவேண்டும் என்றும் அவ்வாறாயின் இதனைப் பரிசீலிக்கலாம் என்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினரான ம.மயூரன் தெரிவித்தார்.

இதில் முக்கியமாக 'தேசிய மக்கள் சக்தியைச்' சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், ஈபிடிபியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் தவிசாளருடன் இணைந்து ம.இராஜேஸ்வரி அவர்களுக்குச் சொந்தமான இந்த வெற்றுக்காணியில், வே.பிரபாகரன் வாழ்ந்த வீட்டைப் போன்ற அமைப்பில் ஒரு புதிய வீட்டையே கட்டவேண்டும் என்றும் அல்லாவிட்டால் வேறு எந்தக் கட்டிட விண்ணப்பத்திற்கும் ஆதரவு வழங்கமுடியாது என்ற இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தாயகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற எங்களுடைய மக்களுக்கு சந்தேகத்தையும்,அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தின் பல தலைவர்களின் வீடுகள் இன்றும் பேணப்படுவது போல் த.வே.பிரபாகரன் அவர்களது, வீட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று எழந்தமானமாக, யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாத சபை உறுப்பினர்களும், வெளியில் உள்ள சில புத்திஜீவிகளும் விடயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாது, இல்லாத வீட்டைப் பாதகாப்பது போன்ற கற்பனையான கருத்துக்களைத் தெரிவித்து மக்களைக் குழப்பி வருகின்றனர்.

அவர்கள் அறிந்து கொள்வதற்காகப் பின்வரும் இரு உதாரணங்களை மட்டும் தருகின்றோம்.

• உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியர் இலண்டனில் இறுதிவரை வாழ்ந்த வீடு ஸ்ட்ராட்ஃபோர்டு-அப்போன்-அவான் (ளுவசயவகழசன-ரிழn-யுஎழn) என்ற இடத்தில் அமைந்துள்ளது. சேக்ஸ்பியரின் பிறப்பிடமான .இது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மரப்பலகை வீடு.

இந்த வீடு தற்போது அவர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக, சேக்ஸ்பியர் பிறந்த இட அறக்கட்டiயினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.அந்த வீடு எந்த இராணுவத்தாலும் இடித்துத் தரைமட்டமாக்கப்படவில்லை. அவை இன்றும் அப்படியே இருக்கின்றன.

அவரது அந்த பாரம்பரிய வீட்டில் அவர் பாவித்த கட்டில்கள், அவர் இருந்து எழுதிய மேசை, கதிரைகள், ஆடைகள்.கெண்டிகள், அவருடைய அடையாளத்தைக் காட்டும் தொப்பி, மேலங்கிகள், அவர் எழுதிய எழுதுகோல்கள், புத்தகங்கள்,அவரது தினக்குறிப்பு போன்ற பல பொருட்களும் .இன்றும் நினைவுச் சின்னங்களாகப் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

• அதேபோன்று மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் இன்றும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ளது, இது தமிழக அரசால் நினைவுச் சின்னமாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.

இது, பனை விட்டங்கள் மற்றும் மரத்தூண்களுடன் பழமை மாறாமல் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அதேவேளை புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லமும் நினைவுச் சின்னங்களாக உள்ளன. இந்த வீட்டில் அவரது நூல்கள் அவர் பாவித்த பாவனைப் பொருட்கள், அவரது கவிதை வரிகள்,பாவித்த உடைகள், எழுதுகருவிகள்,கைத்தடி போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

.அதேபோன்று சென்னையில் பாரதியார் இறுதிக்காலத்தில் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லம்,1993-இல் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு 'பாரதி இல்லம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடும் அப்போதிருந்த பிரித்தானிய இராணுவத்தினரால்கூட அழிக்கப்படவில்லை.

இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி

ஆனால் வே.பிரபாகரன் 13 வயது வரை வாழ்ந்த வீட்டை சிறிலங்கா இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்து அத்திவாரம் உட்பட ஒரு கல்கூட இல்லாது அப்புறப்படுத்தி உள்ளனர்.

அருங்காட்சியகமாக தலைவர் பிரபாகரனின் வீடு - நடக்கவுள்ள மாற்றங்கள் | Prabhakaran S House To Be Turned Into Museum

இந்த வீட்டில் வே.பிரபாகரன் பாவித்த எந்தஒரு பொருட்களோ அல்லது நினைவுச் சின்னங்களோ அல்லது அவர் பாவித்த நூல்களோ, ஆடைகளோ எதுவும் இல்லாத நிலையில் அந்த இடத்தில் புதிதாக அதே போன்ற ஒரு வீட்டை மீண்டும் கட்டுவதன் மூலம் எவ்வாறு அதனை ஒரு நினைவுச் சின்னமாகக் கருதமுடியும்.

'கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்' என்பதுபோல், இதனால் எவருக்கும் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. இந்தக் காணியின் உரிமையாளர்களும் தற்போதைக்கு இங்கு வந்து இருக்கப் போவதில்லை.அதேவேளை வே.பிரபாகரன் அவர்களின் எந்தஒரு அடையாளமும் இல்லாத பழைய வீட்டைப்போன்று திரும்பவும் புதிய கற்களைக் கொண்டு கட்டவேண்டும் என்ற உறுப்பினர்களின் தீர்மானம் வேடிக்கையானதும்,விசமத்தனமானதும்,முற்றிலும் ஏற்கமுடியாததுமான ஒரு பிரசாரமாகும்.

அவர்களது தவறான வழிநட்ததலால் இந்தக் கருத்தையே வெளியில் உள்ளவர்கள் சிலரும் தெரிவித்துவருவததான் நகைப்புக்கிடமானது.

தவிசாளர் எங்களுடைய கட்டிட விண்ணப்பத்திற்கான அனுமதி கொடுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்காது, வேண்டுமென்றே இழுத்தடித்துத் தமது தவறுகளை மறைப்பதற்காக அனைத்து ஊடகங்களுக்கும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார்.

தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக பிரதமர் - சாடும் முன்னாள் எம்.பி

தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக பிரதமர் - சாடும் முன்னாள் எம்.பி

பாதகமான விளைவுகள்

இவர்களது தவறான பிரசாரங்களினால், பின்வரும் பாதகமான விளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன:

1. இந்தத் திட்டத்தின் சரியான தாற்பரியத்தைத் தமிழ்மக்கள் உணரவிடாது, தமிழ்மக்களின் மனங்களில் குழப்பத்தையும்,தெளிவின்மையையும் ஏற்படுத்தியுள்ளனர்.

2. இந்தத் திட்டத்தைக் குழப்ப எத்தனிக்கும் தமிழ் விசமிகளின் கரங்களைப் பலப்படுத்தியுள்ளனர்.

3. தமிழ்மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது சிங்கள மக்களிடையேயும் எமது திட்டங்கள் தொடர்பான சந்தேகத்தையும் ஏற்படுத்தும்வகையிலும் இவர்களின் பிரச்சாரம் அமைந்துள்ளது. இதன் பிரதிபலிப் பாகவே ,பாராளுமன்றத்தில் சிங்களக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இந்த விடயம் தொடர்பாகப் பேசி பாரதூரமான விடயமாக மாற்றியுள்ளனர்.

4. சிறிலங்கா பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் விளைவாக விசாரணைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் இதனைக் கண்காணிக்கவும் வேண்டும் என்றும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம், உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

5. அதன் விளைவாக இராணுவ புலனாய்வாளர்கள் ஒரு புறத்திலும், பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த புலனாய்வாளர்கள் இன்னொருபுறமமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக என்னை விசாரணைக்கு உட்படுத்தினர்.

6. அதேவேளை இந்திய செய்தி ஊடகங்களில், விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்தின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற தவறான செய்திகள் 'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல்' வல்வெட்டித்துறை நகரசபையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

ஆதன உரிமையாளரால் எனக்கு தந்த இந்த ஆதனத்தின் அற்றோர்ணி தத்தவத்தைத் தனக்கு மாற்றித் தரவேண்டும் என்றவகையில் இக்காணியை நகரசபைக்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் அல்லாவிடடால், நகரசபைக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கவேண்டும் என்று தவிசாளர் சிறுபிள்ளைத்தனமாக காணி உரிமையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதனை அவர்கள் நிராகரித்ததுடன் இந்தக் கட்டிடத்திற்கான அனுமதியைக் காலம் தாழ்த்தாது வழங்குமாறும் கடிதம் மூலம் கேட்டுள்ளனர். எனது அன்பான தமிழ் உறவுகளுக்கு,பின்வரும் விடயங்களைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

அரசாங்கத்தின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் நடைமுறைச் சட்டத்திற்கு அமைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும்,காணி உரிமையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இத் திட்டத்தை முன்னெடுப்பதாகப் புலனாய்வுத்துறையினரின் விசாரணையில் தெரியப்படுத்தினேன்

• இந்தத் திட்டம் தொடர்பாக நான் அவர்களுக்குத் தெளிவு படு;ததிய பின்னர்,அரசாங்கத் தரப்பில் இருந்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதுவித இடையுறுகளோ அல்லது தடைகளோ ஏற்படுத்தப்படாது என நம்புகின்றேன்.

• இந்தத் திட்டத்திற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகரசபை எவ்வித தடையுமின்றி வழங்கு வார்கள் என்ற நம்பிக்கைiயை இழந்துள்ளதால், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளரை 'தமிழர் வரலாற்று மையம்' என்ற எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, இதற்கான அனுமதியைப் பெற்றுத்தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளூறு கோரியுள்ளோம். அவரும்,இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

• நாங்கள் அமைக்கப் போகின்ற இக்கட்டிடத்தின் அழகிய முகப்புத் தோற்றம் வெகுவிரைவில் தங்கள் பார்வைக்காகத் தெரியப்படுத்தப்படும்.

• தமிழ்மக்கள் அனைவரும் இ;ததிட்டம் தொடர்பான தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து இதனை நிறைவேற்றுவதற்கான முழுமையான ஆதரவைத்தர முன்வரவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

• இது தொடர்பான தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நிச்சயம் பரிசீலிக்கப்படும்

• இத்திட்டம் வெற்றிகரமாகச் செயற்பட நிதிஉதவி செய்ய விரும்புவோர் இதற்கென இலங்கை வங்கியின் வல்வெட்டித்துறை கிளையில் திறக்கப்பட்டுள்ள கணக்கிற்கு அனுப்பினால்,இவற்றிற்கான பற்றுச் சீட்டு;க்களும், கணக்குத் தொடர்பான விபரங்களும் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்படும் தமிழர் வரலாற்று மையம்- இலங்கை வங்கி,வல்வெட்டித்துறை கணக்கு இல. 95408068

• இக்கட்டிடத்தை நிறைவு செய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு சுமார் 70 மில்லியன் என கட்டிட ஒப்பந்தக்காரர் விபரமாக அனுப்பியுள்ளார். கட்டிடச் செலவுகளுக்கு மேலதிகமாக வருடா வருடம் ஏற்படும் நிர்வாகச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடும் இதன்மூலம் மேற்கொள்ளப்படும்.

• வரவு செலவு தொடர்பான தகுதி வாய்ந்த கணக்காய்வாளரினால் ஆய்வு செய்ய்பபட்ட வருடாந்த கணக்காய்வு அறிக்கை தங்கள் பார்வைக்குத் தெரியப்படுத்தப்படும். உங்களுடையதும்,காணி உரிமையாளரினதும் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் இதனை எனக்குத் தரப்பட்ட ஒரு நம்பிக்கைச் சொத்தாகக்கருதி, இந்த வேலைத்திட்டத்தை உங்கள் ஆதரவுடன் முன்னெடுத்து இதனை ஒரு அறக்கட்டளையின் கீழ் கொண்டுவந்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவோம் என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025