தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக பிரதமர் - சாடும் முன்னாள் எம்.பி
பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலம் கடந்துள்ளது. இத்தகைய பின்னணியில் அரசாங்க தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுள்ளன.
தமிழ் இனத்திற்கு எதிராக யுத்தம்
வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் எங்களை கேட்டா யுத்தம் செய்தார்கள் என்கின்றார்.

நாம் தமிழ் இனத்திற்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்தோம்.
ஆனால் பிரதமரின் கருத்து யுத்தம் செய்த இளைஞர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கொள்கையை விதைக்கும் விடயத்தையே பிரதமர் முன்னெடுத்து வருகின்றார்.
அந்த வகையில் புலம் பெயர் அமைப்புக்களின் தரகராகவே பிரதமர் உள்ளார். அதேபோல் அரசாங்கம் இயலாமையை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |