அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
                                    
                    United States of America
                
                                                
                    World
                
                                                
                    Gun Shooting
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    அமெரிக்காவின் (America) - பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (24) பார்மொடன் - ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 36 வயதுடைய ஆணொருவரும் 44 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
மர்ம நபர்கள்
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கறுப்பு உடை அணிந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அருகில் நடத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        