முகம் கழுவியவரை இழுத்துச் சென்றது முதலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Kalutara Incident
By Sumithiran
களுத்துறை (kalutara)பாலத்தின் கீழ் நேற்று (12) காலை முகம் கழுவிக் கொண்டிருந்த ஒருவரை முதலை பிடித்துச் செல்வதைக் கண்டதாக ஒருவர் களுத்துறை வடக்கு காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன்படி, காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, முதலை இழுத்துச் சென்றதாக கூறப்படும் இடத்தில் ஒரு சூட்கேஸில் கதிர்காமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரின் அடையாள அட்டை மற்றும் இரண்டு வங்கிக் கணக்குப் புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு காவல்துறையினர் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்