களுத்துறை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரஷ்ய தாய் மற்றும் மகள்
Christmas
Prisons in Sri Lanka
Russia
By Sumithiran
நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை (kalutara)சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் நேற்று (25) விடுவிக்கப்பட்டனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் ரஷ்ய (russia)பெண் ஒருவரும் அவரது 4 வயது குழந்தையும் அடங்குவதாக மல்வத்தை சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டெப் தெரிவித்தார்.
களுத்துறை நீதிமன்றினால் தண்டனை
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பெண்ணுக்கு களுத்துறை நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டது.
மகளும் பெண்ணும் வெலிசர குடிவரவு தடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 389 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி