இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : ஆரம்பமானது மதிப்பீட்டு பணி
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பொலன்னறுவை(polonnaruwa), முல்லைத்தீவு(mullaitivu) மற்றும் மன்னார்(mannar) மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அம்பாறை(ampara), மட்டக்களப்பு(batticaloa), அநுராதபுரம்(anuradhapura), குருநாகல்(kurunagala), மாத்தளை(matale) ஆகிய மாவட்டங்களில் பயிர் சேதம் தொடர்பான ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், திருகோணமலை(trincomale), கிளிநொச்சி(kilinochchi), யாழ்ப்பாணம்(jaffna) ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு
இன்றைய (24) நிலவரப்படி வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு 100,000 ஏக்கர் என கணக்கிடப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பங்களிப்புடன் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கமநல காப்புறுதி சபை
சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விளைநிலங்களும் ஆய்வு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |