அரசால் வசூலிக்காமல் தட்டிவிடப்படும் 98,000 கோடி ரூபாய் வரிப்பணம்!
அரசால் வசூலிக்கப்படக்கூடிய 98,000 கோடி ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி பணத்தை வசூலிக்காமல் நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழு வேறு உண்மைகளை முன்வைத்து வசூலிப்பதனை தவிர்க்கும் கோட்பாட்டை பின்பற்றுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் வரி வசூலிப்பவர்களை பாதுகாப்பவர்களாகவுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த அறிக்கையில் அரசாங்கம் வசூலிக்கக் கூடிய 90,400 கோடி ரூபாய் வரித் தொகை வசூலிக்கப்படவில்லை என முதலில் தெரியவந்துள்ளது.
வரிப்பணம்
இது தெரிய வந்து ஓராண்டுக்கு மேலாகியும் குறித்த வரிப்பணம் வசூலிக்கபடாமையால் 98,000 கோடி வரி கைவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு இதனுடன் தொடர்புடைய குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் மார்ச் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரி 65 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் வரி மோசடி செய்பவர்களுக்கு அரசாங்கம் மேலும் உதவும் செயலாகியுள்ளதென குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |