உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம்
Crude Oil Prices Today
By Beulah
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிக்குமானால் கச்சா எண்ணெய்யின் விலை குறைவடையும் என்பதற்கமைவாகவே இன்று விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீப்பாய் ஒன்றின் விலை
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.37 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.05 டொலராகவும் குறைவடைந்துள்ளது.
