பேருந்தில் இருந்து கீழே விழுந்த மகள் : சாரதியை கடுமையாக தாக்கிய தந்தை
Sri Lanka Police
Kurunegala
By Kathirpriya
குருணாகலில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி, நபர் ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார், மாவத்தகம பிரதேசத்தில் தனது மகள் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது கீழே விழுந்ததால் அவரது தந்தை பேருந்தின் சாரதியை தாக்கியுள்ளார்.
குருணாகலில் இருந்து நேற்று (24) பிற்பகல் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாவத்தகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பேருந்தின் பின் கதவு வழியாக இறங்க முயற்சித்த மாணவி ஒருவர் தவறி விழுந்துள்ளார், அதிஷ்டவசமாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், தன் மகள் பேருந்தில் இருந்து விழுந்ததால் கோபமடைந்த தந்தை, சாரதியை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி